சிவகார்த்திகேயன் எனக்கு பிடித்த நடிகர்

இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.
வாஷிங்டன்


தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.


நெப்போலியன் நடித்திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் வெளியாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.


விஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது.


தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் தான் விஜய் நடித்தார். நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதனால் தானே வளர்ந்து வருகிறார்” என்றார்.


சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பற்றி கூறிய நெப்போலியன், “சீமராஜாவில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருந்தேன். ஒரு தொகுப்பாளராக இருந்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்


. அது சாதாரண விஷயமல்ல. எனக்கு பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்”


என்று கூறினார்


 



தினமும் காலையில் மலரும் ஆத்திசூடியில்


நாளைய 5.7.2020


ஆத்தி சூடி
           (பா)
            *
      பாம்பொடு 
         பழகேல்
            *
        ஒருவிகற்ப
         இன்னிசை


தினதுது



           வெண்பா


 


 


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி