தமிழக அரசின் சூப்பர் திட்டம்

சென்னையை காக்க களமிறங்கிய 81 குழுக்கள்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்!


சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு மொத்தமாக கடைகளை கண்காணிக்க புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.


 சென்னையில் தற்போது லாக்டவுன் தளர்வுகளுடன் அமலில் உள்ளது. கடந்த இரண்டு வாரம் கடும் கட்டுப்பாட்டுடன் லாக்டவுன் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து தற்போது கட்டுப்பாட்டுடன் லாக்டவுன் அமலில் உள்ளது.


சென்னையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


 சென்னையில் தற்போது கொரோனா கேஸ்களும் குறைய தொடங்கி உள்ளது. தினசரி 1700-2700 வரை முன்பு கொரோனா கேஸ்கள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் தற்போது கேஸ்கள் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் தற்போது தினசரி கேஸ்கள் 1200க்கு கீழ் செல்ல தொடங்கி உள்ளது. லாக்டவுன் பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. ஆனால் கட்டுப்பாடு இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் முக்கியமாக டிராபிக் சிக்னலில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது உள்ளது. இனி சென்னையில் இருக்கும் 400+ சிக்னல்களில் இனி சிவப்பு விளக்கு 1 நிமிடத்திற்கு மேல் இருக்காது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு அதன்படி சென்னையில் சிவப்பு விளக்கு அதிக நேரம் இருந்தால் மக்கள் கூட்டம் கூடி கொரோனா பரவலும் அதிகமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


 இன்னொரு பக்கம் தற்போது சென்னையில் அங்கு மொத்தமாக கடைகளை கண்காணிக்க புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது அனைத்து விதமான கடைகளையும் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.


      81 குழுக்கள் இதற்காக சென்னையில் தற்போது தமிழக அரசு சார்பாக 81 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருக்கும் அனைத்து கடைகளையும் சோதனை செய்யும் வகையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சென்னையில் இருக்கும் அனைத்து கடைகளுக்குள் அவ்வப்போது சென்று சோதனைகளை செய்வார்கள். எப்படி சோதனை திடீர், திடீர் என்று அதிரடி படை போல இவர்கள் சோதனைகள் செய்வார்கள். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் காரணமாகவே அதிகமாக கொரோனா பரவியது. அது போல இனி எங்கும் நடக்க கூடாது. கடைகளுக்கு வரும் மக்கள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட கூடாது என்பதால் இப்படி அதிரடி படை அமைக்கப்பட்டு உள்ளது


      . இவர்கள் சென்னை முழுக்க சோதனை செய்வார்கள். ரோல் மாடல் திட்டம் ஒரு குழுவில் மொத்தம் 20 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் அனைத்து கடைகளுக்கும் தினமும் செல்வார்கள் . அதோடு இவர்கள் கடைகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்வார்கள். கேமரா இல்லாத கடைகளில் கேமராவை பொறுத்த பொறுத்த சொல்வார்கள். இதன் மூலம் கூட்டத்தை கண்காணிக்க முடியும்.


      இந்த விதிகளை மீறினால் 14 நாட்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி தனி கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை. பெங்களூர், மும்பை, டெல்லியில் கூட அதிரடி படை போலீசார்தான் இந்த சோதனையை செய்து வருகிறார்கள். தமிழகம் மட்டுமே இதற்காக தனி குழுவை அமைத்துள்ளது.



 



ருத்ரா


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி