சிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்

 

சிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்


ஜூலை 11, 2020 08:59


 


உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள்வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்ததால் பரபரப்பு.


  


பாத்திரங்களை தட்டி வெட்டுக்கிளிகளை விரட்டும் கைதிகள்


பிரோசாபாத்:

வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கப்பட்டும், வெட்டுக்கிளிகள் கூட்டமாக இருக்கும் இடங்களில் டிரோன்கள் மூலம் மருந்து தெளித்தும் வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.வெட்டுக்கிளிகள் கூட்டமாக வரும்போது அதிக சத்தம் எழுப்பினால் வெட்டுக்கிளிகள் அந்த இடத்தில் இருந்து வெளியேறுகின்றன. எனவே, பாத்திரங்களை தட்டி வெட்டுக்கிளிகளை விவசாயிகள் விரட்டுகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள் நேற்று வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்தது. இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறைக்குள் வெட்டுக்கிளிகளின் திரள் படையெடுப்பதைக் கண்ட கைதிகள்,  பாத்திரங்களை தட்டி  வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்றனர்.

சிறை வளாகத்தில் ஏராளமான பயிர் வகைகள், பழ வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. கைதிகள் பாத்திரங்களை தட்டி ஓசை எழுப்பியதால் வெட்டுக்கிளிகள் அந்த பகுதியை விட்டு நகர்ந்தன.

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,