லெமன் ஃபிஷ் பிரை

லெமன் ஃபிஷ் பிரை


02-07- 2020


 


லெமன் ஃபிஷ் பிரை



தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)


சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை தே க
பச்சை மிளகாய்,  கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் – தலா அரை தே க
எண்ணெய் - ஒரு தே க  


உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

மீனை ஊற வைப்பதற்கு:

எலுமிச்சைச் சாறு - அரை தே க
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தே க


மிளகாய்த்தூள் - ஒரு தே க


 


 


செய்முறை :
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்.
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக் கொள்.


ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறுஉப்புமஞ்சள் தூள்மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊற வை.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம்நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கு.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதுகறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கு.
அதில் மிளகுத்தூள்கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டுகலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக  வை,.
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலா கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.


 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி