வைட்டமின் சி நிறைந்த தக்காளி சூப்

வைட்டமின் சி நிறைந்த தக்காளி சூப்


ஜூலை 27, 2020


தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.



தக்காளி சூப்


தேவையான பொருட்கள் :

தக்காளி -  கால் கிலோ,


பெரிய வெங்காயம் - 2,
வெண்ணெய்,  சோள மாவு – தலா ஒரு தே கரண்டி,


உப்பு, மிளகுத்தூள், பால், கொத்தமல்லி தழை - தேவையான அளவு


 


 


செய்முறை:

ஒரு வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கு.

தக்காளி, மற்றொரு வெங்காயத்தை பெரிதாக நறுக்கு.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரை.

கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வை.

சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தக்காளி சூப்பில்


தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி