சேமியா பக்கோடா

சேமியா பக்கோடா


ஜூலை 08, 2020 16:03



சோமியா பக்கோடா


தேவையான பொருட்கள் :

சேமியா - 100 கிராம்


கடலை மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 2
புதினா - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.




செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்.

புதினாவை பொடியாக நறுக்கி கொள்.

சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டு.

வடிகட்டிய சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், மிளகாய் தூள், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறவும் (நீர் சேர்க்க வேண்டாம். சேமியாவின் ஈரம் போதுமானது).


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்தக் கலவையை பகோடாக்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடு.


 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி