சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம்




சித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் 









 x













சென்னை: ''சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வாயிலாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.






 

சென்னை அம்பத்துார், அத்திப்பட்டில், வீட்டு வசதி வாரிய கட்டடத்தில், 5,000 படுக்கைகள் கொண்ட, 'கோவிட் கேர் சென்டர்' அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, 1,000 படுக்கை வசதியுடன், ஒரு பகுதி தயார் நிலையில் உள்ளது. மரம், இரும்பு போன்ற திடப்பொருட்கள் இல்லாமல், அட்டையை பயன் படுத்தி, 100 கிலோ எடையை தாங்கக்கூடிய, படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.அந்த மையத்தை, நேற்று பார்வையிட்ட, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில்தான், 'ரெம்டிசிவீர், டாசிலிசுமாப்' ஆகிய சிறப்பு மருந்துகள், தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.இந்திய மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வாயிலாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.



latest tamil news




அதை, தமிழகம் முழுதும் அதிகரிக்கவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தொற்றின் அளவு அதிகரிக்காமல் தடுக்க, சித்த மருத்துவம் பயனுள்ளதாக இருக்கிறது.கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர், பிற நோய் பாதிப்புகளால் இறந்தாலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அறிவுரைப்படி, அது, கொரோனா இறப்பாகவே கருதப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்



 















Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி