பருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ்
பருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ்
ஜூலை 22, 2020 10:52
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரை சாப்பிட மறுக்கும். குழந்தைககளுக்கு கீரையை இவ்வாறு செய்து கொடுங்கள்.
பருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
பருப்புக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
பூண்டுப் பல் - 4
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பருப்பு கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்.
வெங்காயம். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்.
வெறும் வாணலியில் தனியா பட்டை கிராம்பு பூண்டு சேர்த்து வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கு. வெங்காயம் சற்று வதங்கியதும் கீரை சேர்த்து வதக்கவும். உப்பு, அரைத்த பொடி சாதம் சேர்த்துக் கிளறி இறக்கு. எந்த கீரையிலும் இந்த ரெசிபியை செய்யலாம். எலுமிச்சைச் சாறு கலந்து பருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ் பரிமாறவும்.
Comments