ப்ளே ஸ்டோரில் ஜியோமார்ட் செயலி

ப்ளே ஸ்டோரில் ஜியோமார்ட் செயலிரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக தளமான `ஜியோ மார்ட்', தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.


ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் $5.7 பில்லியன் முதலீடு செய்தது. அதன்பின் வாட்ஸ்அப் இந்தச் சேவையுடன் இணைக்கப்பட்டது. வாட்ஸ்அப் பேமன்ட் வசதி இந்தியாவில் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் ஜியோ மார்ட்டில் பணம் செலுத்தும் முறை இன்னும் எளிமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டோர் டெலிவரி நிறுவனங்களை மக்கள் பெரும்பாலும் நாடுகிறார்கள். அதனால், இதுதான் சரியான நேரம் என்று ஜியோ மார்ட் வேகமாகச் செயல்பாட்டுக்கு வந்தது. முதலில் இணையதளம் மூலமாக மட்டும் ஆர்டர் செய்யும் வகையில் தொடங்கப்பட்ட சேவை இனி ஆண்ட்ராய்டு போன்களில் செயலி மூலமாகவும் பெறலாம்.


ஆம், சத்தமே இல்லாமல் ஆண்ட்ராய்டு போன்களுக்கான ஜியோ மார்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். `இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் ஷாப்பிங்களை இந்தச் செயலி மூலம் அனுபவியுங்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மார்ட் செயலிகளில் முன்னணியில் வர, பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது ஜியோ மார்ட். அதில் முக்கியமானது, ஃப்ரீ டெலிவரி.


ஊரடங்கு காலத்தில் பொருள்களை டோர் டெலிவரி செய்ய அதிக சேவை கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டியில் குதித்துள்ள ஜியோ, ஃப்ரீ டெலிவரி மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம். மேலும் எம்.ஆர்.பி-யில் இருந்து குறைந்தபட்சம் 5% விலை குறைவாக இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறது ஜியோ.


பொருள்களுக்கான பணத்தை நெட் பேங்கிங் மூலமாகவோ, கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டுகள் மூலமாகவோ சொடெக்ஸோ கார்டுகள் மூலமாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ மார்ட்டில் கிடைக்கும் காய்கறிகளும் பழங்களும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.JAYANTHIKUMAR


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,