தடைகளைத் தாண்டி வென்ற பர்கூர் பழங்குடியினர் பள்ளி
தலைமையாசிரியரே இல்லை; 100 சதவீதத் தேர்ச்சி!- தடைகளைத் தாண்டி வென்ற பர்கூர் பழங்குடியினர் பள்ளி
50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், தலைமையாசிரியரும் இல்லாமல் ஆசனூர், பர்கூர் பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறையே 82 சதவீதம், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தடைகளைத் தாண்டிய சாதனையாகவே இதைக் கருதுகிறார்கள் கல்வியாளர்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகள் 20 உள்ளன. இப்பள்ளிகளில் சராசரியாக 50 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாகவே உள்ளன. இவற்றில் 3 உயர்நிலைப் பள்ளிகள், 2 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். இந்த 5 பள்ளிகளுக்கும் சில ஆண்டுகளாகத் தலைமையாசிரியர்களே இல்லை என்பதுதான் துயரம்.
Comments