பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை

பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை


என்னவாகும்?


    : ஜூலை 05, 2020 



சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து அடுத்த இரண்டு மாதம் அந்த குழுவை, போலீஸ் ஸ்டேசன் பணிக்கோ, ரோந்து பணிக்கோ ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும், போலீஸ் தலைமையகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த வேண்டாம் என நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இதனையடுத்து, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், அந்த குழுவுக்கு தடை விதிக்கப் பட்டது.
இது போல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோந்து, வாகன தணிக்கை மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்தக்கூடாது. போலீஸ் நிலையத்திற்குள் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப் பட்டுள்ளது.


விழுப்புரம் எஸ்.பி., போலீஸ் ஸ்டேசனுக்குள் சென்று பணியாற்ற மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளில் ஈடுபட தடையில்லை என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை தமிழகம் முழுவதும் பயன்படுத்த தடை விதிக்கப்படலாம் என்றும் , அந்த குழுவை கலைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.





திசை மாறிய அமைப்பினர்




போலீஸ் டிஜஜியாக இருந்த பிரதீப் வி பிலிப் என்பவர், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க முக்கிய காரணியாக இருந்தார். இவர் வங்கி அதிகாரியாக இருந்து பின்னர் போலீஸ் அதிகாரியானர் . இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், குயின்ஸ் விருதுகள் வாங்கி உள்ளார். மனித நேயத்தின் அடிப்படையில் செயல்படும் இவர் திருநெல்வேலியில் அவர் டிஜஜியாக இருந்தபோது பிரண்ட்ஸ் ஆப் போலீசை வளர்ச்சி பெற செய்தார். இந்த அமைப்பினருக்கு இவர் முக்கியத்துவம் தருவார். தற்போது தமிழ்நாடு சிவில் சப்ளை டிஜிபியாக உள்ளார். துவக்கத்தில் இந்த அமைப்பு நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருந்தது. பின்னர் போக, போக தடம் மாறியது. போலீசாருக்கு வசூல் செய்து கொடுப்பது, மேலும் சில உள் குத்து வேலைகளை செய்ய துவங்கினர்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி