லடாக்குக்கு விஜயம் செய்த மோடி..

லடாக்குக்கு விஜயம் செய்த மோடி


.. மக்கள் ஆச்சரியம்.. குவியும் பாராட்டு


: இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும், முன்னறிவிப்பு இன்றி பிரதமர் மோடி லே பகுதிக்கு சென்றார். இந்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


 இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நிலவுகிறது. கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் திசோ ஏரியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஜூன் 15ம் தேதி சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இடையே கைலப்பு முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சீனா அறிவிக்கவில்லை. அமைதியை விரும்புகிறோம்.. அத்துமீறினால் விட மாட்டோம்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி எழுச்சி உரை டிக்டாக் தடை ஜூன் 15ம் தேதிக்கு பிறகு கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய அரசு சீனாவின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. சீனாவிற்கு எதிராக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை விதித்தது. அப்போது பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீனாவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். சீனா அதிர்ச்சி இந்நிலையில் சீனாவை பற்றி ஒரு வார்த்தை கூட நேரடியாக குறிப்பிடாமல் அமைதி காத்து வந்த பிரதமர் மோடி சத்தமே இல்லாமல் லே பகுதிக்கு சென்றது யாருக்குமே முதலில் தெரியாது. இந்த பயணத்தில் பாதுகாப்புதுறை அமைச்சர் கூட இடம் பெறவில்லை. ராணுவ தளபதி உடன் சென்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி.


    . இதை சற்றும் எதிர்பார்க்காத அண்டை நாடான சீனா கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்தியாவின் புதிய யுக்தியால் சீனா அதிர்ச்சியில் உள்ளது. நம்ப முடியவில்லை இந்த சூழலில் பிரதமர் மோடியின் லடாக் பயணம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், அவரது துணிச்சலை பாராட்டி உள்ளனர். ஒருவர் தனது பதிவில் "என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை. பிரதமர் மோடி அவர்களே உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். யாரும் சிறப்பாக செயல்படவில்லை இன்னொருவர் தனது பதிவில் "நீங்கள் தான் இளம் தலைமுறைக்கு ஊக்கமான மிகப்பெரிய தலைவர். நீங்கள் தான் இந்தியாவின் ரியல் தபாங் " என்று கூறியுள்ளார்.


          பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் தகூர் பியூஸ்சிங் என்பவர், மோடி நடந்து செல்லும் படத்தை போட்டு அவரைவிட யாரும் இதை சிறப்பாக செய்யவில்லை என்று கூறியுள்ளார். ராணுவத்திற்கு ஊக்கம் நிகல் என்பர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம்ம செம்ம.. என்று பாராட்டி உள்ளதுடன் இது சீனா மீதான உளவியல் தாக்குதல் என்றும் இந்திய இராணுவத்திற்கு ஒரு தார்மீக ஊக்கம் தரும் செயல் என்றும் பாராட்டி உள்ளார். பிராத்திக் என்பவர் வெளியிட்டுள்ள ட்விட் பக்கத்தில் உங்களை போன்றவர் பிரதமராக இருக்கும் வரை என் நாடு பாதுகாப்பாக இருக்கும். கணிக்க முடியாத உங்களது(பிரதமர்) அடுத்தடுத்த செயல்கள்தான் உங்களை வெற்றியாளராக வலம் வர வைத்துள்ளது என்று கூறியுள்ளார். 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,