இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சேவை
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துகொள்ள விழிப்புணர்வும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது இனியஉதயம் தொண்டுநிறுவனம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020-ந் தேதி முதல் வரும் ஜூலை 31வரை மத்திய அரசு அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தொடரும் இந்த கொரொனா வைரஸ் தொற்று ஊரடங்கில் தினக்கூலி தொழிலார்கள்,விதவைகள், ஆட்டோ ஓட்டுனர்கள்மற்றும் துப்பரவு தொழிலார்கள் ஆகியோர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரதில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இனிய உதயம் தொண்டு நிறுவனம், திருவள்ளூர் மாவட்டதில் ஆவடி, செவ்வாபேட்டை, வீராபுரம் மோரை செங்கல்பட்டு மாவட்டதில் பல்லாவரம்,தாம்பரம் அகரம் தென், கோவிலஞ்சேரி மப்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள 1200க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ பருப்பு குழந்தைகளுக்கு சிப்ஸ் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. தமிழக அரசு அறியுரைகளின் படி தனிநபர் இடைவெளியை பயன்படுத்தபட்டது. பயனாளிகள் அனைவரும் முககவசம் அணிந்து வந்து நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர். அரிசி மற்றும் பருப்பு வழங்கிய ZOMATO FEEDING INDIA நிறுவனத்திற்கும் சிப்ஸ் மற்றும் முககவசம் வழங்கிய GOONJ நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை வாழ்த்துகளையும் இனியஉதயம் தொண்டுநிறுவனம் மற்றும் பயனாளிகள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
S.KOMALA M.Sc.,MBA.,MSW.,LLB.,
Managing Trustee
INIYAUDAIYAM CHARITABLE TRUST (IUCT)
OFF., ADD., 4/1 ,ARUNTHATHIPURAM MAIN ROAD
AVADI,CHENNAI - 600 054 TAMILNADU, INDIA
Contact : 094444 23600/7904195163
E-MAIL: iniyaudaiyam@gmail.com , iuct_cfc@yahoo.com
www.iniyaudaiyamngo.org facebook.com/iniyaudaiyam1
BE A PART TO MAKE A SMILE ON THE FACES OF EVERY CHILD
All Donations are exempt from Income Tax under Section 80-G
தகவல்
அல்லாபக்ஷ்
Comments