ரவுடி விகாஸ் ஜாமீன் பெற்றது பெரும் திகைப்பாக உள்ளது

பல்வேறு வழக்குகளில் சிக்கிய போதிலும் ரவுடி விகாஸ் ஜாமீன் பெற்றது பெரும் திகைப்பாக உள்ளது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை



 

புதுடெல்லி: கான்பூரில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே மீது பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும்அவர் ஜாமீன் பெற்றது பெரும் திகைப்பாக இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே மத்தியப்பிரதேசத்தில் கடந்த 10ம் தேதி பிடிபட்டான். கொலை உள்ளிட்ட 65 வழக்குகளில் தொடர்புடைய அவன்கான்பூர் அழைத்து வரும் வழியில் தப்ப முயன்றதால் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டர் குறித்து பல தரப்பினரும் சந்தேகம் கிளப்பினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உபி அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைத்தது. இதற்கிடையேஉபி அரசு தாமாக விசாரணை கமிட்டி அமைக்கக் கூடாதுஉச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டுமென கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய விகாஸ் துபே போன்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது நீதித்துறையின் தோல்வியாகும். விகாஸ் துபே மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும்அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது திகைப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம்ஒரு மாநிலமாக சட்டத்தை நீங்கள் நிலைநிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வது உங்களின் கடமையாகும். விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்த விசாரணை கமிட்டியில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரையும்மாஜி போலீஸ் உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.


 அதிக ரத்தப்போக்கால் இறந்தார்
ரவுடி விகாஸ் துபேவின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் விகாஸ் உடலில் 3 குண்டுகள் துளைத்துள்ளது. அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக விகாஸ் உயிரிழந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் 10 காயங்கள் இருந்தன. இதில் 6 அவரது உடலில் குண்டு துளைத்து வெளியேறியதால் ஏற்பட்டது. 4 காயங்கள் உடலின் வலது பக்கத்தில் ஏற்பட்டிருந்தது. தலை, முழங்கை, விலா, அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. குண்டு துளைத்து கீழே விழுந்ததால் இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,