கனவுகளின்நாயகன்

 


இலக்கியம்


இன்று அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள்


கனவுகளின்நாயகன்


இளைஞர்களுக்கு


ஈடு செய்யமுடியாத பேரிழப்பே!!!


கடமையைப் பற்றி


கனவு காணக்கூறியவரே


வாழ்வின் அர்த்தம்


உணர்த்தியவரே


ஊக்கமுள்ள வார்த்தைகளால்


உரமிட்டவரே


மாணவர்களின் மாணிக்கமே


மாசற்ற தங்கமே


இந்திய தேசத்தின் முத்தும் நீரோ


இளைஞர்களின் சொத்தும் நீரோ


நம் பிறப்பு என்பது சம்பவமாய் இருக்கலாம்


மரணம் என்பது சரித்திரமாய்


இருக்கட்டும் என்றீரே


சாதிக்கும் எம்மை


தோள்தட்ட நீர் இல்லையே


எங்கள் மனதை விட்டு


நீங்கா இடம் பெற்றவரே


விண்ணுலகில்


ஓய்வு பணியாற்ற சென்றாயோ


மாணவர்களின்


தந்தையாய் திகழ்ந்தவரே


இளைஞர்களின்


நண்பனாய் இந்திய மண்ணின் மைந்தனாய்


ஏவுகணையின் நாயகனாய்


எங்கள் அப்துல்கலாமாய்


அதே உருவத்தில்


மீண்டும் கிடைப்பீர்களா.


 


.. மஞ்சுளா யுகேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,