வங்கிகளில் குறைந்த அளவு இருப்பு தொகை மற்றும் பணம்  கையாளும் கட்டணம்  உயரும்.

வங்கிகளில் குறைந்த அளவு இருப்பு தொகை மற்றும் பணம்      


           கையாளும் கட்டணம் 1ம் தேதி முதல் உயரும்.


17-07-2020   01:07:18


புதுடெல்லி: சேமிப்பு கணக்கில் குறைந்தப்பட்ச இருப்பு தொகை மற்றும் பணம் கையாளும் கட்டணத்தை உயர்த்த வரும் 1ம் தேதி முதல் வங்கிகள் முடிவு செய்துள்ளன. வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தப்பட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ஏற்ப இந்த இருப்பு தொகை மாறுபடும். இதற்கு மேல் இருப்பு குறைந்தால் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. அடிப்படை வங்கி கணக்குகள் சிலவற்றுக்கு மட்டும் இதில் விலக்கு உண்டு.
இந்நிலையில், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கோடக் மகிந்திரா வங்கி, ஆர்பிஎல் வங்கி ஆகியவை குறைந்த பட்ச சராசரி இருப்பு தொகை அளவு மற்றும் பணம் கையாள்வதற்கான கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் முன்பு மாதாந்திர சராசரி இருப்பு தொகை ரூ.1,500 ஆக இருந்தது. இது தற்போது ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு கீழ் குறைந்தால் கிராமப்புற கிளைகளில் ரூ.20 பெருநகரங்களில் ரூ.75 அபராதம் வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மாத சராசரி இருப்பு ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுபோல், பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். இதுகுறித்து மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குநர் ராஜீவ் கூறுகையில், ‘‘டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு கட்டணம் கிடையாது. மேலும், ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது. கோடக் மகிந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளில் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பிறகு பணம் எடுக்க ரூ.20, இருப்பு பார்ப்பது போன்றவற்றுக்கு ரூ.8.50, இதுபோல் கணக்குகளுக்கு ஏற்ப பணம் எடுப்பதற்கு 4வது பரிவர்த்தனைக்கு ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி