நம்பிக்கை நாயகன்


 
மதிப்பிற்குரிய பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாம் முன்னாள் ஜனாதிபதி அவர்களின் நினைவு தினம் இன்று.


. அவரை நினைவு கூறும் வகையில் அக்னி ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய செயலை இன்று நாம் போற்றிப் பாராட்டுவோம்.


இவரது சுயசரிதம் அக்னி சிறகுகள் 5 ந்து அத்தியாயங்கள்  ஆக  பிரிக்கப்பட்டுள்ளன.


. இப்புத்தகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக படித்தது,, பணி செய்தது,, பணி செய்து கொண்டிருப்பது,, ஏவுகணை  தொடர்பான  சாதனைகள் போன்ற விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.. அத்தியாயம் 3ல்  அக்னி  ஏவுகணை பல சிரமங்களுக்கிடையே வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பட்ட விவரம் இடம்பெற்றுள்ளது.. அச் சாதனை விவரத்தை இங்கு பார்ப்போம்.. "அக்ன்"  அணியில் 500க்ம்  அதிகமான  விஞ்ஞானிகள் அப்துல் கலாம் அவர்கள் தலைமையில் இடம் பெற்றிருந்தார்கள்... "அக்னி"யை ஏவும் மகத்தான முயற்சியில் பல அமைப்புகள் இணைந்து செயலாற்றின.1989  ஏப்ரல்  20... அக்னியை ஏவுவதற்கான நாள் குறிக்கப்பட்டது.....


அந்த நாள் 1989 ஏப்ரல் 20ஆம் தேதியும் வந்தது.. ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாக கவனித்து  கொண்டிருந்தது.. ஏவுகணையை செலுத்துவதற்கு 14 நொடிகள் இருந்தபோது  நிறுத்து  (Hold) சமிக்ஞை கொடுத்தது. (Hold). அதாவது ஒரு கருவி இயங்கவில்லை.. அந்தக் கோளாறு சரி செய்யப்பட்டது.. இதற்கிடையில் இன்னொரு கட்டுப்பாட்டு நிலையம்   வேறு  நிறுத்தும்படி  சொன்னது ஆராய்ந்ததில் உட்புற  மின்சக்தி  பயன்பாட்டில் பல கோளாறுகள்.. இதனால் 1989 ஏப்ரல் 20ல் செலுத்த வேண்டிய ஏவுகணையை அப்போது கைவிட வேண்டியதாயிற்று.
      அடுத்து  10 நாட்களாக 24 மணி நேரமும் பாடுபட்டு அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்தார்கள்.  இரண்டாவது  முறையாக 1989 மே 1 அன்று விண்ணில்  செலுத்துவதற்கு  தயாராக ஏவுகணையை விஞ்ஞானிகள் சரி செய்து விட்டார்கள்.  ஏவுகணை  விண்ணில் பாய 10 நொடிகள் இருக்கும் போது(T-10)  தானியங்கி  கம்ப்யூட்டரில்  நிறுத்து என்ற சமிக்ஞை வந்தது.. இரண்டாவது முறையாகவும் ஏவுகணையை செலுத்த இயலவில்லை.. இந்த நிகழ்வை பத்திரிக்கை உலகம் கிண்டலும் கேலியும் செய்து செய்திகள் வெளியிட்டன.
     நூற்றுக்கணக்கான  விஞ்ஞானிகளும் ஊழியர்களும் இடைவிடாமல் தொடர்ந்து பாடுபட்டு  கோளாறுகளையும், கட்டுப்பாட்டு  சாதனங்களையும் சரி செய்தார்கள்.. இறுதியாக 1989 மே 22ல் "அக்னி"யை விண்ணில் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த காட்சியை காண்பதற்கு பாதுகாப்பு அமைச்சர்  சே. சி .பந்த்  அவர்கள்  வந்திருந்தார்கள்.. அதற்கு முந்தைய நாள் (மே 21) பௌர்ணமி இரவில் அப்துல் கலாமும் பாதுகாப்பு அமைச்சர் பந்த் அவர்களும் மற்றும்  அதிகாரிகளும்  உலாவ சென்றார்கள்.. அப்போது பாதுகாப்பு அமைச்சர் அப்துல் கலாம் அவர்களிடம் " கலாம்!..  அக்னி வெற்றியை நாளை கொண்டாடுவதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று வினவினார்.?". ஒரு சில நொடிகள் எதை கேட்பது என்று திகைத்து  ஒரு  வழியாக "RCI  இல்   நடுவதற்காக  ஒரு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும்"  எனக் கேட்டார்.க்.


பாதுகாப்பு  அமைச்சரின் முகத்தில் ஒரு தோழமை உணர்வு பளிச்சிட்டது.. "அக்னி காக பூமித்தாயின் ஆசிகளை நீங்கள் பெறுகிறீர்கள் ...நாளை நாம் வெற்றி அடைவோம்" என்று அவர் நம்பிக்கையுடன் சொன்னார்.
   அடுத்த  நாள்...... காலை 7-10 க்கு "அக்னி" விண்ணில் பறந்து சென்றது.  திட்டமிட்டிருந்த பாதையில் துல்லியமாக அது சென்று கொண்டிருந்தது. வெறும் 600 நொடிகளில் நிகழ்ந்த அந்த கம்பீரமான விண் பயணம்  அப்துல்  கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் உள்ள சோர்வை துடைத்து எறிந்தது.. அந்த பலாபலனை அன்று இரவு கலாம் அவர்கள் தன் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்.



     தீச் சகுணங்களை தடுத்து நிறுத்த
      மேல்நோக்கி செலுத்தும்  அம்சமாகவோ 
       உனது பேராற்றலை வெளிப்படுத்தச் 
       செலுத்த படுவதாகவோ 
        அக்னியைப்  பார்க்காதே. 
       அது நெருப்பு 
       இந்தியனின் இதய நெருப்பு 
       அது ஒரு வெறும் ஏவுகணையன்று 
       இந்த நாட்டின் எரியும் பெருமை 
      அதனால் தான் அதற்கு 
       அத்தனை ஒளி 
      அக்னி  வெற்றியை அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி மகத்தான சாதனை என்று பாராட்டினார். 



      தேசத்தின் பாதுகாப்பிற்காக நவீன தொழில் நுட்பத்தை உள்நாட்டிலேயே  உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியின் பிரதிபலிப்பு அக்னி என்றும்  கலாமின் முயற்சிகளில்  தேசம் பெருமிதம் கொள்கிறது என்று பிரதமர் ராஜிவ் காந்தி வெகுவாக பாராட்டினார். 



   அக்னி வெற்றியில் தமது கனவு மெய்ப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தார் அன்றைய ஜனாதிபதி வெங்கட்ராமன். 



    இந்நாளில் அவர் நினைவாக நாமும் அவரது உள்ளத்தில் உதித்த சிந்தனைத் துளிகளை  அவரது அறிவுரைகளை, அவர் வாழ்க்கையில் கடைபிடித்த நல்ல விஷயங்களை நாமும் முடிந்த அளவு கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுக்கலாம்


 


 கா. இராசா  மீரா 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி