வெள்ளத்தில் மிதக்கும் காசிரங்கா வன உயிரியல் பூங்கா

வெள்ளத்தில் மிதக்கும் காசிரங்கா வன உயிரியல் பூங்கா


 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழப்பு


ஜூலை 19, 2020 18:04


அசாமில் பெய்த கனமழையால் காசிரங்கா வன உயிரியல் பூங்காவில் காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


அசாம் வெள்ளம்


கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வெள்ளத்தில் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. விவசாயப் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.  மழை வெள்ளத்தால் 35 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


 


 தொடர் கனமழை காரணமாக காசிரங்கா உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வெள்ளத்தில் சிக்கி 9 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.  இது குறித்து காசிரங்கா பூங்காவின் இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காசிரங்கா பூங்காவின் 80 சதவீதப் பகுதி இன்னும் வெள்ளத்தில் மூழ்கியே காணப்படுகிறது, வெளியேறி சென்ற காண்டாமிருகங்கள் மீட்கப்பட்டு உள்ளன.இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்த வரை, 5 ஆண் காண்டாமிருகம்,  4 பெண் காண்டாமிருகம் உட்பட 9 காண்டாமிருகங்கள் என 108 விலங்குகள் பலியாகியுள்ளன. நாங்கள் 136 விலங்குகளை காப்பாற்றியுள்ளோம். வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் துவங்கியிருப்பதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இயக்குநர் கூறியுள்ளார். சரியான பலி எண்ணிக்கைகை கணக்கிடும் நோக்கில் எல்லாப் பகுதிகளிலும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணிகளை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

 

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,