தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி


தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி


சென்னை: தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கி இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களை கொண்டு முகக்கவசம் அணிந்தும், 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடித்தும் திருவிழாக்கள் நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. கோயில் திருவிழாவில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறவேண்டி இருந்தால், அனுமதி பெற்று திருவிழாக்கள் நடத்தலாம் என்றும்  இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.


அடுத்த, ஞாயிற்றுக் கிழமை திருவிழா வந்தால் அனுமதி உண்டா? முழு ஊரடங்கு நடைமுறை கிடையாதா? 


அன்றையதினம் திருவிழா நடத்த அனுமதி என்றால், அனைவருக்கும் அனுமதி வழங்கலாமே?  என்ன நடைமுறை இது? 


திருப்பதி கோவிலில் அனுமதி அளித்துவிட்டு, தலைமை பூசாரி முதல், கடைநிலை ஊழியர வரை தீநுண் கிருமியால் பாதிக்கப்பட்ட பின்னர், ஆலயத்தினுள் அனுமதி அளிக்கும் ஆணையை திருத்தலாமா என்று ஆலோசிப்பதாகத் தகவல்  வருகிறது. எனவே, எதை செய்தாலும், பின் விளைவுகளை நன்கு ஆராய்ந்து பின் ஆணை பிறப்பிப்பது நல்லது. 









 

  

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,