ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


கோப்புபடம்


புதுடெல்லி:


 


சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிக்க அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்து உள்ளன.


 


சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, மோனோபோலி என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.


 


சீனா எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


 


அதேபோல் ஹாங்காங் பிரச்சினையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறி விட்டது.


 


இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.


 


இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை எதிர்ப்பதாக ஜப்பான் கூறியுள்ளது.


 


தற்போது சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது. 


பாதுகாப்பு உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, ஜப்பான் தனது சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. இந்தத் திருத்தத்துடன், ஜப்பான், அமெரிக்காவைத் தவிர, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடனும் தன் பாதுகாப்பு உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்கிறது.


 


கொரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி சீனாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். 


 


அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. இதனால் அமெரிக்க - சீனா மோதல் உச்சகட்டத்தை எட்டுகிறது


 


சீனா தற்போது தனக்கு ஆதரவான ரஷியா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது.


 


கொரோனா நோய் தோன்றிய சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால்மற்ற நாடுகளை கொரோனா ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா நெருக்கடியில் பாகிஸ்தானுக்கு சீனா மறைமுகமாக உதவி வருகிறது. இதனால் உலகத்திற்கு எதிராக சீனா ஏற்கனவே உயிரியல் போரை தொடங்கி விட்டதாகவே நிபுணர்கள் கருதுகிறார்கள்


 


தற்போது இந்தியா மற்றும் மேற்கு போட்டியாளர்களுக்கு எதிரான தாக்குதலுக்காக பாகிஸ்தானும் சீனாவும் ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை ( bio-warfare) விரிவுபடுத்துவதற்கான இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, 


 


இதில் ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள் அடங்கும் என  தி கிளாக்சன் செய்தி நிறுவனம் பல உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.


 


உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிலிருந்து கொரோனா நோய் தோன்றியிருக்கலாம் என்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து  சீனா விமர்சிக்கப்பட்டு வருகிறது.


 


சமீபத்திய ஆண்டுகளில் உயிரியல் போரின் அச்சுறுத்தல் கணிசமாக வளர்ந்துள்ளது, டி.என்.ஏ ஆராய்ச்சியில் சீனா பெரிதும் ஈடுபட்டுள்ளது, இது ஒரு உயிரியல் ஆயுதத்தை குறிவைக்க அல்லது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இருக்கக்கூடும் என கவலைகொள்ள செய்து உள்ளது.


 


தி கிளாக்சனில் (The Klaxon) அந்தோனி கிளான் (Anthony Klan) எழுதிய அறிக்கையின்படி, உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகம் பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (டெஸ்டோ) உடன் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வளர்ந்து வரும் தொற்று நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்க மற்றும் பரவும் நோய்களின் உயிரியல் கட்டுப்பாடு குறித்த முன்கூட்டிய ஆய்வுகளுக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


 


டெஸ்டோ ஒரு இரகசிய உயிரியல் ஆயுத திட்டத்தின் கீழ் ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல்வேறு இரட்டை பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.


 


உகான் ஆய்வகம் பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் தனது சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுத்தளத்தை உருவாக்க உதவுவதற்காக பாகிஸ்தானிய விஞ்ஞானிகளுக்கு நோய்க்கிருமிகள் மற்றும் உயிர் தகவல்தொடர்புகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும் அளித்துள்ளது.


 


 


உளவுத்துறை ஆதாரத்தின்படி, இந்த பயிற்சி பாகிஸ்தானுக்கு வைரஸ்களின் மரபணு அடையாளம் காணல், ஆபத்தான நுண்ணுயிரிகளுக்கான அணுகல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தொற்று நோய்களுக்கான மரபணு கருவிகளைப் பயன்படுத்துவதற்கான திறனை மேம்படுத்த" உதவும்.


 


இந்த ரகசிய திட்டம் பாகிஸ்தானில் உள்ள சிவில் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசாங்க சுகாதாரத் துறைகளின் மேற்பார்வையிலிருந்து  பிரிக்கபட்டு உள்ளது. 


 


"இரகசிய சீனா-பாக்கிஸ்தான் திட்டம் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் பிரிக்க வெற்றிகரமான மண் மாதிரி சோதனைகளை "நடத்தியுள்ளது, இது பேசிலஸ் ஆந்த்ராசிஸ் அல்லது ஆந்த்ராக்ஸுடன்" குறிப்பிடத்தக்க ஒற்றுமையை "கொண்டுள்ளது."


 


(பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் என்பது ஒரு கிராம்-நேர்மறை, மண்ணில் வசிக்கும் பாக்டீரியம் ஆகும், இது பொதுவாக உயிரியல் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது)


 


இந்த திட்டத்தில் சீனாவின் ஈடுபாட்டை பார்க்கும் போது இந்தியா மற்றும் முக்கிய மேற்கத்திய உளவு அமைப்புகள் "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவதற்கான சீனாவின் முக்கிய திட்டமாக இருக்கலாம் என்று ஒரு பாதுகாப்பு நிபுணர் தி கிளாக்சனிடம் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்  தெரிவித்துள்ளார்.



 


இந்த திட்டத்தில் சீனாவின் ஆர்வம் முக்கியமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவதற்கும், வெளிநாட்டு மண்ணில் ஆபத்தான சோதனைகளை நடத்துவதற்கும், சீனாவின் நிலத்தையும் அதன் மக்களையும் ஆபத்துக்கு உட்படுத்தாமல் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்த உந்தப்படுகிறது


 


சீனா அபாயகரமான உயிரி வேதியியல் ஆராய்ச்சிக்கான ஒரு இடமாக பாகிஸ்தானை தேர்ந்து எடுத்தது நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், அதே சமயம் "இதுபோன்ற செயல்களுக்கு தனது சொந்த நிலப்பகுதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது.


 


சீனா-பாகிஸ்தான் உயிரியல் திட்டம் ஏற்கனவே கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் (சி.சி.எச்.எஃப்.வி) மீது சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


 


உயிரி பாதுகாப்பு நிலை -4 நோய்களைக் கையாள வசதியற்ற ஆய்வகங்களில் ரத்தக்கசிவு காய்ச்சல் குறித்து பாகிஸ்தான் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.


 


உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்தில் குன்மிங்கில் மருத்துவ உயிரியல் நிறுவனத்தையும் நிறுவியுள்ளது என்ற கவலைகள் உள்ளன என அதில் கூறப்பட்டு உள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,