வெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை

வெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை


03-07-2020


கடந்த காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாககருதப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.


குழந்தையின்மை பிரச்சனை


தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூக பிரச்சினையாக பார்க்கப்படுவது உண்மை. கடந்த காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கருங்கல் அன்னை டெஸ்ட் டியூப் பேபி மையம், குழந்தையின்மை சிகிச்சையில் முத்திரை பதித்து வருகிறது என மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரும், ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவருமான டாக்டர் சுதா கூறினார். மேலும், அவர் கூறுகையில் ஆய்வுகூட சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கருமுட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கை முறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.இவ்வாறு கருமுட்டையுடன் விந்தை இணைத்து செயற்கையாக உருவாக்கப்படும் கருவை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்க முறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து, அப்பெண் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக குழந்தை பெற்று கொள்வதில் ஆர்வம் இருந்தும், இயற்கையாக சில சிக்கல்களை கொண்டிருக்கும் தம்பதிக்கு இம்முறையினால் குழந்தை பெற்று கொள்ள உதவலாம்.

இம்முறையால் பிறக்கும் குழந்தையை பொதுவான பேச்சு வழக்கில் ‘சோதனைக்குழாய் குழந்தை‘ என அழைப்பார்கள். உயிரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்த கருத்தரிப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் 5 சதவீதம் என கனடாவில் உள்ள அமைப்பு ஒன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் நடந்த கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டலை முயன்று பார்த்த பின்னர் 40 விழுக்காடு தம்பதிகள் இந்த பரிசோதனை முறையின் போதும், மேலும், 26 விழுக்காடு தம்பதிகள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையை பெறுகின்றனர்.

எமது மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சிகிச்சைக்கு வரும் அதிகபடியான பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ. சிகிச்சை அளித்து கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. இந்த வகையில் எமது மருத்துவமனையில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். மேலும், பிற கருத்தரித்தல் மையங்களை விட குறைந்த கட்டணத்தில் அன்னை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,