இளம் வயதில் சிகரம் தொட்ட நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார் (12 சூலை 1975 ஆண்டு காஞ்சிபுரம் மாவடத்தில் பிறந்த இவர் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். மலபார் போலீஸ் படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைப் பயணம், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் படத்துடன் நிறைவுக்கு வந்தது.


999ம் ஆண்டு தளபதி விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் இடம்பெற்ற "உன் பேர் சொல்ல ஆசைதான்" பாடலை எழுதி சினிமா உலகில் பிரபலமானார்


 பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள்சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.


     காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்


 சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார்.


கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர்[, 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார்.


நல்ல நல்ல பாடல் வரிகளை தமிழ் திரையுலகுக்கு கொடையாக கொடுத்த வள்ளல்களில் நா. முத்துக்குமாரும் ஒருவர். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, கில்லி (சூர தேங்காய்), காதல், சந்திரமுகி (கொக்கு பற பற), கஜினி (சுற்றும் விழி). புதுப்பேட்டை, சிவாஜி (பல்லேலக்கா), கல்லூரி, யாரடி நீ மோகினி, அயன் (விழி மூடி யோசித்தால்). அங்காடி தெரு, பையா, மதராசபட்டினம், பில்லா 2, தங்கமீன்கள், ராம், சைவம், 2.0(புல்லினங்காள்) என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

“பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.


இவர் 2006 ஆண்டு தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.


ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்


இவர் எழுதிய நூல்கள் • நியூட்டனின் மூன்றாம் விதி(கவிதைத் தொகுப்பு)

 • கிராமம் நகரம் மாநகரம்

 • பட்டாம்பூச்சி விற்பவன்(கவிதைத் தொகுப்பு)

 • ஆணா ஆவண்ணா(கட்டுரைகள்)

 • என்னை சந்திக்க கனவில் வராதே

 • சில்க் சிட்டி(நாவல்)

 • பால காண்டம்(கட்டுரைகள்)

 • குழந்தைகள் நிறைந்த வீடு(ஹைக்கூ)

 • வேடிக்கை பார்ப்பவன்(கட்டுரைகள்)

 • தூசிகள் (கவிதைகள்)

 • அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)


பெற்ற விருதுகள்


2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது • 2006: வெயில்திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது

 • 2009: அயன்திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.


இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய "ஆனந்த யாழை மீட்டுகிறாள்" பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. 


அடுத்தபடியாக, இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் படத்திற்காக நா. முத்துக்குமார் எழுதிய "எல்லாம் அழகு" பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார்.


 ருத்ரா


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,