சுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை
சுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
ஜூலை 03, 2020
வாஷிங்டன்: உலக வரலாற்றில் 2020ம் ஆண்டுக்கு தனித்த இடமுண்டு. குறிப்பாக, கொரோனா வைரஸ், பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுப்பு என, இந்தாண்டின் ஒவ்வொன்றும் நிகழ்வும் அதிர்ச்சி தரும் சம்பவங்களாகவே உள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது ஒரு வீடியோவும் இணைந்துள்ளது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2569529
அமெரிக்காவின் மைர்டில் கடற்கரை ஓரத்தில், பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை, பெரிய அளவிலான சுறா மீனையே கவ்விச் செல்வது வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களால், கடந்த இரு நாட்களாக, உண்மையிலேயே சுறா மீனை தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா என, விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
Comments