ஆம்லெட் புளிக்குழம்பு

 









ஆம்லெட் புளிக்குழம்பு


ஜூலை 13, 2020 15:56


தோசைசூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட இந்த ஆம்லெட் புளிக்குழம்பு அருமையாக இருக்கும்.



ஆம்லெட் புளிக்குழம்பு


தேவையானவை :

முட்டை - 4


எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
புளி - எலுமிச்சை காய் அளவு
மஞ்சத்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
கொத்த மல்லித்தூள் - அரை ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க வேண்டியவை

காய்ந்த மிளகாய் - 2
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்

தாளிக்க வேண்டியவை:

கடுகு -  1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4டீஸ்பூன்
வெந்தயம் - 1/4டீஸ்பூன்


கறிவேப்பிலை - 1 கொத்து


 




செய்முறை

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்.

பின்பு மிளகாய், சீரகம், மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்.

பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்.

பின்பு சோம்பையும், தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்.

பின்பு முட்டை, உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய், சீரகம், மிளகு) பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்.

தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்து கொள்.

பின்பு ஆம்லெட்டை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கு.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்.

தக்காளி குழைய வதக்கியதும் புளிச் சாரையுடன், மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க வை.

மசாலா பச்சை வாசனை  போனவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது (தேங்காய் + சீரகம்) சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு இறக்கு.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,