சளி தொல்லைக்கு தீர்வு தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம்

சளி தொல்லைக்கு தீர்வு தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம்


 


 



ஆகஸ்ட் 07, 2020


சளிஇருமல்தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கற்பூரவள்ளிசுக்கு சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த ரசம் விரைவில் நிவாரணம் தரும்.


 


கற்பூரவள்ளி சுக்கு ரசம்


தேவையான பொருட்கள் :
 
கற்பூரவள்ளி இலை - 5


சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 கப்


நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 




செய்முறை:

கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்.
 
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக  அரை.

இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வை.

மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்.


சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம் தயார்.


 



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி