3.29 நிமிடங்களில் 230 குறள் ஒப்புவிப்பு: குமரி மாணவி

3.29 நிமிடங்களில் 230 குறள் ஒப்புவிப்பு: குமரி மாணவி சாதனை


 


ஆக 15, 2020 



நாகர்கோவில்:குமரி மாவட்ட மாணவி யூதிஷா 3 நிமி


 


டம் 29 வினாடிகளில் 230 குறள்களை ஒப்புவித்து உலக சாதனை படைத்தார்.



நாகர்கோவில் அருகே சொத்தவிளையை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. மனைவி சாந்தி. இவர்களது மூத்த மகள் யூதிஷா, 13. அரசு பள்ளியில் 8 ஆம்  வகுப்பு படிக்கிறார்.


 


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாணவி ஒருவர் 5 நிமிடம் 46 வினாடிகளில் 230 குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்திருந்தார்.  அதனை மிஞ்சும் வகையில்,


 


தலைமை ஆசிரியை அகிலாவின் ஊக்குவிப்பால் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் , கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் 230 குறள்களை 3 நிமிடம் 23 வினாடியில் யூதிஷா ஒப்புவித்தார். அவருக்கு உலக சாதனைகளை பதிவு செய்யும் டிரம்ப்' நிறுவனம் சாதனை சான்றிதழை வழங்கியது.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,