புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்

புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்


ஆகஸ்ட் 08, 2020


 சிவப்பு அரிசியில் புரதம்நார்ச்சத்துபோன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.


 


சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்


தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்


உளுந்து - கால் கப்


வெங்காயம் - ஒன்று


கேரட் - 1


கொத்தமல்லி - சிறிதளவு


எண்ணெய் உப்பு - தேவையான அளவு.


 


 


 



செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்.


கேரட்டை துருவிக்கொள்.


சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... மாவுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கு.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை கனமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடு.

சத்தான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் தயார்,  புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கருவேப்பிலை சட்டினி, அல்லது எது பிடிக்குமோ அதனுடன் சேர்த்து சாப்பிடலாம்..












 

ReplyForward



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி