சத்தான கொள்ளு புலாவ்

சத்தான கொள்ளு புலாவ்


ஆகஸ்ட் 11, 2020



 


கொள்ளு புலாவ்


தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 3 கப்


கொள்ளு, தயிர், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - தலா ஒரு கப்
வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது,  - ஒரு மேசைக் கரண்டி
தக்காளி - 2
மிளகாய் தூள் - அரை தேக் கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி


பிரியாணி மசாலா தூள்,  எண்ணெய், நெய் - தலா 2 மேசைக் கரண்டி



 



செய்முறை :

கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை ஊற வை.


வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வை.


ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கு.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கு.
அடுத்து அதில் பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கிய பின் தக்காளி, கொத்தமல்லி தழை, கொள்ளு, காய்கறி கலவை தயிர் உப்பு சேர்.
அரை கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடு.
ஒரு பாத்திரத்தில் அரிசியை விட 3 மடங்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் ஊறிய அரிசியை வடித்து கொதிக்கும் நீரில் போடு.
4  நிமிடம் கொதித்த பின் அரிசியை வடித்து கொள்ளு குருமாவில் போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடு.


சூடான கொள்ளு புலாவ் தயார்.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி