ஞானம் என்றால் என்ன

ஞானம் என்றால் என்ன



* தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப்பெரிய ஞானம். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கின்றனர் புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள்.


அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.
* அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மை யினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிஷதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.


* முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டதாக யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது படிப்படியாக அனுபவத்தால் உண்டாவது. அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள் யாவும் உயர்வடைகின்றன.


* ஒருவன் பெற்ற ஞானம், உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவான்.


* தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப் பெரிய ஞானம் ஆகும். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கிறார்கள். புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள். அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன.


* அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுக்கூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல என்று கடோபநிடதம் கூறுகிறது. அதுபோல மதம் என்பதும் சடங்குகளாலும், நம்பிக்கைகளாலும் உருவாவது அல்ல.


* முழுமையாக ஆன்மிக ஞானம் பெற்றுவிட்டபின், யாரும் பெருமைப்படக்கூடாது. ஞானம் என்பது படிப்படியாக அனுபவத்தால் உண்டாவதாகும். அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள் யாவும் உயர்வடைகின்றன.
* ஒருவனை பெற்ற ஞானத்தால் உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவான். ஞானக்கண் மனிதனை உள்முகமாகப் பார்க்கத் தூண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இயந்திர வசதியைக் குறையுங்கள்


உலகியல் வாழ்க்கையில் உடலுக்குரிய வசதிகளைத் தேடிக் கொண்டிருப்பவன் அவற்றை அடைவதிலேயே தன் ஆற்றல் முழுவதையும் செலவழிக்கிறான். அந்த அனுபவத்திலேயே தங்கி விடுகிறான். அவனால் ஆன்மிக முன் னேற்றம் பெற இயலாது. அதனால்தான், உணவு, உடை, ஓய்வு போன்ற சுகபோகங்களிலும் எளிமையைக் கடைபிடிக்க வேண்டுமென ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. தியாக உணர்வை வற்புறுத்துகின்றன. ஒரு மனிதனின் மனநிறைவு உடற்சுகத்தில் இல்லை. அது மனப்பக்கு வத்தில்தான் இருக்கிறது என்பது வேதாந்தக் கோட்பாடு. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இயந்திரங்களால் ஏற்படும் வசதிகளைக் குறைத்துக் கொள்கிறோமோ, அந்தளவுக்கு மனம் பக்குவமடையும். தெய்வங்களுக்கு மிருகங்களைப் பலி கொடுப்பதால் ஒருபோதும் இறையருளைப் பெற முடியாது. இப்படிப்பட்டவர்களை இறைவன் ஒருநாளும் தன்னிடம் நெருங்க விடமாட்டான். நம்மிடம் உள்ள வசதிகளை தியாகம் செய்து, உடல் இன்பத்தை பலி கொடுப்பதன் மூலமே இறைவனின் பூரணமான அருளைப் பெற இயலும்.இதற்கான சூழ்நிலையைத் தேடித்தான் மகான்கள் காடுகள், மலைகள் என்று ஜனநடமாட்டம் இல்லாத இடங்களைத் தேடிச் செல்கிறார்கள் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் ஆஸ்ரமங்களை அமைத்து இறைசிந்தனையில் தம்மை அர்ப்பணிக்கிறார்கள்.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,