ஆத்தி சூடி (வெ) *** வெட்டெனப் பேசேல் ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(வெ)
***
வெட்டெனப்
பேசேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***ஒலி ஒளி உணர
வெட்டெனப்
பேசினால்
வெற்றியா
கிட்டிடும்
சட்டெனக்
கோபமும்
சண்டையாய்
மூண்டிடும்
தட்டிடச்
சுற்றமும்
தள்ளியே
போய்விடும்
நட்டமே
நட்டிடும்
நா.
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments