பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் 

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்  - தமிழக அரசு


ஆகஸ்ட் 13, 2020 


சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:* தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் 15ந்தேதி காலை 8.45க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

* வீடுகளுக்கே சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

* கொரோனா பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார்.

* சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,