ஓணம் ஸ்பெஷல் : தித்திப்பான அடை பிரதமன்

ஓணம் ஸ்பெஷல் : தித்திப்பான அடை பிரதமன்


ஆகஸ்ட் 29, 2020


கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம் அன்று செய்யும் ஸ்பெஷல் ரெசிபியான அடை பிரதமன் செய்வது எப்படி


 


 


அடை பிரதமன்


தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 டம்ளர்


தேங்காய்ப் பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்  திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வை.
அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்.
வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்.
ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்.
அடுத்து  அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்.
அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு தித்திப்பான அடை பிரதம னை இறக்கு.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,