தினை லட்டு
தினை லட்டு
தினை லட்டு
தினை அரிசியை மாவாக அரைத்து, வெறும் கடாயில் போட்டுச் சிவக்கும்வரை வறுத்து ஆறவையு. ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாகத் தூள் செய்து மாவுடன் சேர்த்துக் கலக்கு. பாதாம், முந்திரி, திராட்சை, வால்நட், பேரீச்சை ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்.
ஒரு சிட்டிகை சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை ஏலப்பொடி இரண்டையும் சேர்த்துக் கலக்கு. நெய்யைக் காய்ச்சி மாவில் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கருப்பட்டி அல்லது வெல்லத்தைச் சேர்க்கும்போது நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி கொஞ்சம் கெட்டியாக ஆனதும் மாவில் கலக்கலாம். கெட்டிப் பாகாகக் காய்ச்சக் கூடாது.
Comments