செக்கிழுத்த செம்மலின் சேவையினை  என்றென்றும் போற்றுவோம்.

தியாகம் என்ற சொல்லுக்கு பொருள் எழுத வேண்டுமென்றால் கப்பலோட்டிய தமிழர்  வ. உ. சி அவர்களின் பெயரைக் குறிப்பிடலாம். 


 இவரது தாத்தா,  பெரியப்பா மற்றும் அப்பா உலகநாதர் அனைவருமே வழக்கறிஞர்கள்.
 
5.9.1872 ல் ஒட்டப்பிடாரத்தில் பிறந்த செல்வச் சீமான்.


 இளம் வயதிலேயே, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருந்தார். தன் தந்தையாரைப் போலவே, சட்டம் பயின்று, வழக்கறிஞர் ஆனார். தனது தந்தையின் அறிவுரையின் படி, தூத்துக்குடி சென்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.


  இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் துவங்கப்பட்டு பத்தாண்டு கழித்து, வ.உ. சி. அவர்கள் ஓட்டப் பிடாரத்தில் அதன் கிளையை துவங்கினார். பாலகங்காதர திலகரின் கருத்துக்கள் அவரது வாழ்க்கையில் திசை திருப்பியது. சுப்பிரமணிய சிவாவின் பேச்சு, கவர்ந்ததன் பயனாய், இருவரும் சேர்ந்து தென்னாடு முழுவதும் தேசியம்  விதைத்தனர்.


 வ. உ. சி அவர்கள் சென்னை வரும் போதெல்லாம், மகாகவி சுப்பிரமணிய பாரதியை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


 ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியை கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.        வ. உ. சி. அவர்கள் தனது எதிர்ப்பினை தெரிவித்தார். இந்திய-இலங்கை வர்த்தகம் நடைபெற, 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்
" சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்து ஆங்கிலேயருக்கு எதிராக. கப்பல் ஒன்றை வாங்கி வர்த்தக மேற்கொண்டதால் , அவ்வமயம் இந்தியர்கள் பயன்பெற்று மகிழ்ந்தனர். அதனால் தான்   நாம் அவரை கப்பலோட்டிய தமிழர்  என்கிறோம். 


வ.உ. சி அவர்கள் வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தார். இதனால் இவருக்கு மக்களின் செல்வாக்கு கூடியது.



 ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில். சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்து சிறை சென்றார். சிறையில் செக்கிழுத்தார், கல் உடைத்தார்.


 கோவை சிறையிலும். கண்ணனூர் சிறையிலும் நான்கரை ஆண்டுகள் வைக்கப்பட்டு விடுதலை செய்யும் காலத்தில் அவரை வரவேற்க வாசலில் அவரது குடும்பமும், சுப்பிரமணிய சிவாவும் தவிர வேறு எவரும் இல்லை.


 செல்வச் சீமானாக  வாழ்ந்து, தம் வாழ்நாள் முழுவதும், இந்திய தேசிய விடுதலைக்காக. பெரும் போராட்டத்தை சந்தித்த இவர், இறக்கும் தருவாயில் , ரூபாய் 90 மட்டும் கடன் அவர் வைத்திருந்தார் என்பதன்  வரலாறு படிக்கும்போது, நமக்கெல்லாம், கண்ணீர் வருவதுடன். அவர் நம் திரு நாட்டுக்காக செய்த ஒப்பில்லாத தியாகம் நம் மனதை விட்டு என்றென்றும் அகலாது.


 செக்கிழுத்த செம்மலின் சேவையினை  என்றென்றும் போற்றுவோம்.


 முருக சண்முகம்
 சென்னை


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,