கன்ஃபூசியஸ்

கன்ஃபூசியஸ் ( தெளிவுபடுத்தியவர்) பிறந்த நாள்/ இன்று -செப்= 28


செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479


♨பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது….


பிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள்.


அந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்கேவண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ்.👀


‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு டெய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள,
அரசன் அதிர்ந்து போனான்.


கன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்றும்படி கேட்டான். வேலைக்கு ஆட்கள், பெரும் மாளிகை, கை நிறையச் சம்பளம் எல்லாம் கொடுக்கப்பட்டது.


மக்கள் நலனுக்காக புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றி மன்னனிடம் ஒப்பைடத்தார் கன்ஃபூசியஸ். ஆனால், எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.


சில வருடங்களிலேயே, இந்தப் பதவியினால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மன்னரிடம் சொன்னார்.‘‘சீமான் போல வாழ்வதைவிட்டு, ஏன் பிச்சைக்காரனாக வீதியில் திரியவிரும்புகிறீர்கள்’’ எனக் கோபத்துடன் கேட்டார் மன்னர்.


‘‘எது வசதியானதோ ஆதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என என் மனம் தொந்தரவு செய்கிறது’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்
கன்ஃபூசியஸ்.


அப்பேர்ப் பட்ட கன்ஃபூசியஸ்கிறிஸ்துவுக்கு முன், 551-ம் வருடம் செப்டம்பர் 28‍ம் தேதி பிறந்தபோது, அவரது தந்தையின் வயது 70. தாய்க்கு வயது 15. இவர் பிறந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தார்.


இவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.



பழைய இலக்கியங்கள், அரசியல்,சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதும் கன்ஃபூசியஸின் தனிப்பெரும் குணமாக வளர்ந்தது. இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார்.


மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்ல்லவில்லை என்பதால்,அவற்ரை புறக்கணித்தார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார்.


பல நாடுகளின் அரசுகள் அவரைத் தங்கள் எல்லைக்கோட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டி அடித்தன.


‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு எனும் ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்’ என மனிதர்களின்துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார் கன்ஃபூசியஸ்.


அதேபோல, வெற்றிபெற்ற மனிதனாக மாறுவதற்கும் அவர் வழி சொன்னார். ‘மனிதர்கள் இயல்பாகவே எளிதான செயல்களைச் செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது சரியல்ல. வெற்றி பெறேவண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்; எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றார்.


அவர் வாழ்வினை மாற்றியதே இந்த மந்திரச் சொல்தான், சீனா முழுவதும் மதம்,சமுதாயம் மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உண்டாக்கவும் காரணமாக இருந்தது.


கி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. 1. நல்ல பண்புகள்.



  • நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.

  • நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.

  • நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.

  • நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.

  • கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

  • நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.


2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்



  • அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.

  • ஆர்வத்துடன் உழைப்பார்கள்.

  • சோம்பலாக இருக்கமாட்டார்கள்.

  • பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.

  • புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.

  • அன்போடு பழகுவார்கள்.

  • நிலைமாறாமல் இருப்பார்கள்.

  • தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.

  • ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.

  • அனைவரையும் அரவணைப்பார்கள்.

  • எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.

  • தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.

  • சட்டத்தை மதிக்கிறார்கள்.

  • சுதந்திரமாக வாழ்வார்கள்.

  • பொறாமைப்பட மாட்டார்கள்.


3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்



  • பணிவன்பு

  • சகித்துக்கொள்ளும் தன்மை

  • சக மனிதர்கள் மீது நம்பிக்கை

  • விடாமுயற்சி

  • கருணை


4. மென்மையான குணங்கள் எவை?



  • மனஉறுதி

  • விடாமுயற்சி

  • மென்மையாகப் பேசுவது


5. கெட்ட குணங்கள்



  • பாசாங்கு செய்தல்

  • கோபப்படுவார்கள்.

  • சண்டை செய்வார்கள்.

  • வதந்திகளை பரப்புவார்கள்.


6. படிப்பு



  • சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்

  • படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்

  • உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.

  • நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.

  • ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.


7. தலைவர்



  • பதவிக்கு மரியாதை கொடுப்பார்.

  • நம்பிக்கைக்குரியவர்.

  • உயிரைத் துச்சமாக மதிப்பர்.

  • நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.

  • நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.

  • அமைதியாக இருப்பார்கள்.



  1. கடவுள்,கோயில்,சடங்குகள்



  • கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.

  • பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.


8. வெறும் சில



  • கெட்டதை எண்ணாதே

  • நேர்மையின் வழியில் நட

  • தன்னடக்கத்துடன் இரு

  • மனஉறுதியுடன் இரு

  • கண்ட நேரத்தில் சாப்பிடாதே

  • வயிறு நிறையச் சாப்பிடாதே.

  • மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே

  • எளிமையாக இரு

  • தவறு செய்தவர்களை மன்னித்திடு


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,