மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்
***************
ஆசிரியர் தின வாழ்த்துகள்
ஆசிரியர் தின வாழ்த்துகள்
கையெடுத்து வணங்குகிறோம் குருவே கையெடுத்து வணங்குகிறோம்
ஏணியாய் நின்று"ஏற்றி விட்ட
இறைவன் நீதானே..
அகர முதல சொல்லி அகிலத்தை அறிமுகம் செய்து வைத்தவரும் நீங்களே
இனிய பலகதைகள் சொல்லி இன்பத்தமிழை ஊட்டியவரும் நீங்களே
ஈன்றத்தாயைப்போல இன்பத்துப்பாலை ஊட்டியவரும் நீங்களே
உலகமொழியாவும் ஒருமொழியாய் கற்றுணர்த்தியவரும் நீங்களே
ஊண் உறக்கமின்றி உண்மையாய்
எங்களுக்கு உழைத்திட்டவரும் நீங்களே
எழுத பழக்கிவைத்தீர்கள்
ஏட்டை படிக்கவைத்தீர்கள்
ஐயம் நீக்கிவைத்தீர்கள்
ஒழுக்கம் கற்றுத்தந்தீர்கள்
ஒளவை மொழியில்
ஓரினம் நாம் என்பதை
கற்றுத்தெளியவைத்தவர்களும் நீங்களே
எக்கணமும் தொழுது நிற்போம் இறைவனாய் உம்மையே.
#மனதின்ஓசைகள்
#மஞ்சுளாயுகேஷ்.
ஆசிரியர் தின வாழ்த்துகள்
Comments