அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா


 


15.9.1909 ல், காஞ்சிபுரத்தில் நேசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.  கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.


 இளம் வயதிலேயே மேடைப் பேச்சில் சிறந்து விளங்கியவர். பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டு திராவிட கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். திராவிடநாடு எனும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். 


 பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின், சில கொள்கை முரண்பாட்டினால், அக்கட்சியை விட்டு வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை துவங்கியவர். 


 சொல்லாற்றல் மிக்க சிறந்த பேச்சாளர், எழுத்தார்வமும்  கொண்டிருந்ததால், நாடகங்கள் மூலமாக கொள்கைப் பிரச்சாரம் செய்தவர். 


 அறிஞர் அண்ணாவின் நல்ல தம்பி ஜமீன் ஒழிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அதன் பிறகு வேலைக்காரி, ஓர் இரவு போன்ற திரைப் படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். 


 தமது பேச்சாற்றலில் காரணமாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையில், அறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பிகளின் ஒத்துழைப்பாலும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். 


1968 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள்,  காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாம்பேட்டை என்னும் கிராமத்தில். நான் இரண்டாவது வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.  அவருடன் மாண்புமிகு அமைச்சர் எஸ்,.ஜே. சாதிக்பாட்சா அவர்களும் உடன் வந்திருந்தார். இப்பொழுதும் அந்த சம்பவம் எனக்கு ஞாபகமாக உள்ளது, அன்றைக்கு நடந்த கலை நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டு உள்ளேன். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, மருத்துவரின் பாத்திரம் ஏற்று, நான்கு வரி  கவிதை வாசித்துள்ளேன். ஏனோ தெரியவில்லை அந்த நான்கு வரிகளும்  இப்போதும் ஞாபகமாய்  உள்ளது. 


 டாக்டராக நானிருந்தால்


 நாடிப்பிடித்துப் பார்த்திடுவேன்


 நாக்கை நீட்டு என்றிடுவேன்


 நன்றாய் ஊசி  போட்டிடுவேன்



 அறிஞர் அண்ணா அவர்கள், பேச்சாற்றல் மிக்கவராக இருந்ததால், அவர் தென்னாட்டு பெர்னாட்ஷா ஆனார். புத்தகங்கள் படிப்பதில் தனித் தன்மை உடையவர்.


 தன்னுடைய அறுபதாவது வயதில்  உடல் நலம் சரியில்லாத காரணத்தால்


 3.2.1969     ல். தமிழ் மண்ணை விட்டு பிரிந்து,


மெரினா கடற்கரை ஓரம் உறங்குகிறார்.


 பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா, அன்றைய தமிழக  அரசால் 15.9.2008 ஆரம்பிக்கப்பட்டு 14.9.2009 வரை நடைபெற்றது.


 



 முருக. சண்முகம்
 சென்னை


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,