ஹிந்து சேனா சார்பாக பாரத பிரதமர் மோடி ஜி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு யாகம்

ஹிந்து சேனா சார்பாக பாரத பிரதமர் மோடி ஜி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நல்ல ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ சிறப்பு யாகம் நடைபெற்றது :  



 கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் பாரத பிரதமர் ஐயா மோடி ஜி அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுளோடும் வாழ சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மிக சிறப்பாக ஹிந்து சேனா அமைப்பு சார்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் மாநில தலைவர் அருள்வேலன் ஜி மற்றும் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன் , ஆனந்த் , சரவணன் , ராம்குமார் , அர்ச்சகர் கல்யாண வெங்கட்ராமன் , ரவி , பாலகுரு , விஸ்வநாதன் , தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களை மாற்று மதத்தினர் மற்றும்  தனிநபர்கள் பல வருடங்களாக  ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் உடனே அனைத்து நிலங்களை மீட்டு அந்தந்த திருக்கோயில்கள் வசம் திருப்பி ஒப்படைக்க உடனே அனைத்துவித நடவடிங்கைகளையும் எடுக்க வேண்டும் , மேலும் சிதிலமடைந்த பல ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் பூஜைகள் கூட இல்லாமல் இருப்பதால் உடனே சிதிலமடைந்த அனைத்து திருக்கோயில்களையும் புதுப்பித்து திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு  ஹிந்து சேனா சார்பாக மாநில தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கைகளை முன்வைத்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி