சோளச் சுண்டல்

சோளச் சுண்டல்

 

         புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி தினங்களில் மாலை வேளையில் முப்பெரும் தேவியருக்கு விதவிதமான நைவேத்தியங்கள் செய்து படைப்பது வழக்கம்.

அதிலும் ஒன்பது நாளும் ஒன்பது விதமான சுண்டல்கள் செய்து படைத்து எல்லோருக்கும் விநியோகிப்பது நல்லது.

ஏராளமான சத்துகள்கொண்ட சோளத்தில் சுண்டல் செய்து உண்பது என்பது வித்தியாசமானதும் சுவையானதும்கூட.

தேவையானவை:-

அதிகம் முற்றாத சோளம் - ஒன்று

மிளகு - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - அரை கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:-

சோளத்தை உரித்து முத்துகளை எடுத்து அலசி உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயில்லாமல் தேங்காய்த் துருவலை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய்விட்டு சோள முத்துகளைப் போட்டு வதக்கி, பொடித்த மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதில் தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து அம்பிகைக்குப் படைக்கலாம். மாங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவினால் இன்னும் சுவை கூடும்.


 


மஞ்சுளாயுகேஷ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,