வாழ்தல் வரம் ..

இன்றைய இலக்கியச்சோலையில்


      


வாழ்தல் வரம் ..


           ( கவிதை  )       -யசோதா சின்னப்பா


 


 


என் மறை



தெரிந்த தவறு அறி


இந்த நிமிடம் நிஜம் குதுகலி


நேர்மை நெறி வழி


நிஜம் மட்டும் தெரிவி


மழலை மனம் விழை


மூன்று தவறு தவிர்


தந்தை மொழி கவனி


தாய் முறை பவனி


நண்பன் கை கோர்


சுற்றம் புகழ்


உறவினர் மதி


கல்வி பகர்


அறம் ஆற்று


கொடுத்து உண்


கறை எதிர்கொள்


தன்னம்பிக்கை பயணி


சுயபகை உதிர்


சினம் துற


பெண் குற்றம் தவிர்


ஆதி உணர்


தேக்கம் உடை


துரோகம் மற


சூழல் நினை


இலை வைத்தியம் உண்


காதலோடு கலவி செய்


இந்த வட்டம் அறி


சுய வட்டம் பிடி


வாழ்கை இது.


..அறிந்தால் அறம் .


. வியந்தால் வினை .


..வாழ்தல் வரம் ..


 


-யசோதா சின்னப்பா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,