ஆழ்கடல் தோணி

 


ஆழ்கடல் தோணி


             (  இன்றைய இலக்கியச்சோலையில் )


           ஆசிரியர் தின வாழ்த்துகள்  கவிதை


       



            


                   ******                     


காயம் வந்திக்கும் ஆசிரியர் என்றாலே 


போகாத பொய்யாவும் போய்விடவே  நின்றேங்கும்


ஆகாத செய்கைகள் ஆயிரமாய் ஆனாலும்


 நாகாக்க   நல்லாசான் நாடு.


சிந்தித்தே நாள்தோறும் சேர்வீர் அவரடியை


வந்தித்தே வாழ்நாளில்  வாழும் வகையறிவீர்


சந்திக்கும் ஆளெல்லாம் சாட்சி உரைத்திடவே


முந்தியே போற்றுவாய் மூது [ஈகை]


பெரியவர்  என்றுநம்  பேதம் அகற்ற


உரியவர் யாரெனில் உலகம் உவந்தே 


அரியவர் என்றவர் அடியைப்  புகழும்  


தெரிந்துடன்  நீங்கிடும் தீது.


லின் விழியால் கருமம் மறைத்தே


மயலில் மயங்கி மனத்தை இழக்கும்


அயலார் செயலை  அறிந்தே  நிதமும்


வியப்பாய் படைப்பார் விருந்து.


 


ர்ரென உட்கார்ந்தே உம்மென்றே  வாழ்வோரும்


கர்ரென எந்நாளும் காரியம் செய்வோரும்


நர்ரெனப் பல்யாவும் நைய்யவே நைப்பாரும்


சர்ரென ஏற்பாரே சார்பு.


தினமும் அவரின்  திருவார்த்தை  கேட்டுமே     


கனமும் செயலில் கருமங்கள்  ஆற்றுவாய்


மனமும் மகிழ்ந்தே மகிமையைப் போற்றுவாய்


வனமே புகினும்  வழுத்து.


வாழ்த்துகள் சொல்ல வணங்கி மகிழ்கிறேன்


ஆழ்த்தியே  வாட்டும்  அறிவுப் பசியையும்


சூழ்ந்திடும் இன்பச்  சுகமாய்த் தணிப்பதால்


ஆழ்கடல் தோணி அவர்.


பொன்மணி உள்ளத்தில் பொங்கிடும் நன்றியாய்


அன்புடன் என்றுமே ஐக்கியப் பட்டாரை


என்னுயிர்  மேலாக எண்ணியே வாழ்த்தினேன்


அன்னையின் பண்பை அறிந்து. 



                  ....கவிஞர் திருச்செந்தில். ச.பொன்மணி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி