நீரிழிவு நோயாளிகளும் புளித்த உணவும்
நீரிழிவு நோயாளிகளும் புளித்த உணவும் 22-09- 2020 புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்குப் பெரும் வகைகளில் நன்மைகளைத் தருகின்றன. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
புளித்த உணவுகள் புரோபயாடிக்குகள் நிறைந்தவை மற்றும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. இது கார்போஹைட் ரேட்டு களை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இந்த புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது என்பது உங்கள் ஒட்டுமொத்த குடல் செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் என்சைம்களைச் சேர்ப்பதாகும். மேலும் இது நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கொழுப்பு மற்றும் இதய நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக கொழுப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புளித்த உணவுகளை உட்கொள்வது சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இருதய நோய்களை ஏற்படுத்தும் என்று அறியப்படும் உடலில் வசோ கன்ஸ்டிரிக்டர்களின் (இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் மருந்துகள்) செயல்பாட்டை தடுக்கிறது. தயிர் போன்ற புரோபயாடிக்குகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், இன்சுலின் உணர்திறனைத் தூண்டவும் உதவுகின்றன, இது டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்குப் பயனளிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். உடல் எடை அதிகரித்தாலே நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏற ஆரம்பித்து விடும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைப்பது என்பது நல்ல விஷயம். எடையைக் கட்டுப்படுத்துவது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். மேலும் குறைந்த கார்ப் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புளித்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் பயன்படுகிறது. குடல் பாக்டீரியாவை மேம்படுத்த ஒரு நாளைக்கு ஒரு முறை புரோபயாடிக்குகள், சாஸ் போன்ற புளித்த உணவுகளை உட்கொள்ளலாம். இது எடை மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். |
Comments