காயப்பட்ட காதல் 

இன்றைய இலக்கியச்சோலையில்


           காயப்பட்ட காதல் 


                 (கவிதை )          - ராதை சுப்பையா, ஈப்போ


கொலையுதிர் காலமாய் வாழ்க்கை உதிர  
கருவண்டு ஒன்று
 ரீங்காரம்
செய்கிறது..


மண் பாண்டம் உடைந்து மண்ணுக்குள் 
புதைந்து போனதுபோல்
 நெஞ்சத்தின் சங்கடங்கள் எல்லாம் சங்கமித்துப் போனது 


வெள்ளை மனம் அற்ற வேந்தன் ஒருவன் வழக்காடியதால்
சூதும் வாதும் உள்ளங் கையில் கண்ணாடி சுமந்து நிற்கின்றது


எப்படியும் படியரிசி என்னுடையதானதால்
இன்றாகிப் போனது நேற்றைய நினைவுகள்...


உயிர் சுமந்து உருகிப்போன உணர்வுகள்    
கலந்திருந்த  குருதிக்குள்  பிண்டமாகி என்னை வெறும் தர்ப்பணமாகியது


நான் சேகரித்து வைத்திருந்த தேன்
 கூட்டுக் காதல்
நொடியில் நொறுங்கி விழுந்து
என்னை 
நடை பிணமாக்கிச்
 சென்றது..


இதோ இதோ 
என் 
காயப்பட்ட காதல்  சிரிக்கின்றது.....
சிதறாமல்..


 


 ராதை சுப்பையா, ஈப்போ


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,