தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாராட்டு.

திருத்துறைப்பூண்டியில் ஏடிஎம்மில்  பணம் எடுக்க சென்ற போது எடிஎம்மில் இருந்த  ரூ 7,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பணத்தை தவறவிட்ட பெண்ணிடம்  ஒப்படைத்து டிஎஸ்பி பழனிச்சாமி பாராட்டு.


 


 


திருத்துறைப்பூண்டி திரெளபதை அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் தாஸ் இவரது மகள் காயத்திரி  பெட்ரோல் பங்க் எஸ்பிஐ  ஏடிஎம்மில் கடந்த 13-ந்தேதி  பணம் எடுக்க சென்றார். அங்கு ஏடிஎம் மெஷினில் ஏற்கெனவே யாரோ பணம் எடுக்க முயன்று வராததால் சென்றுவிட்டனர். இதையடுத்து  அந்த பணத்தை திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் போலீஸில் ஒப்படைத்தார் . இந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பணத்தை தவறவிட்டவர்  தலைக்காடு பகுதியை சேர்ந்த கமலி என்பது தெரியவந்தது அவரிடம் ரூ 7,000  பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  துரை அவர்களின் உத்தரவின்பேரில்  திருத்துறைப்பூண்டி  காவல் துணை கண்காணிப்பாளர்  பழனிச்சாமி ஒப்படைத்தார் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த  தனியார் நிறுவன ஊழியர் காயத்திரிக்கு பலா, மரக்கன்று வழங்கி காவல் துணைகண்காணிப்பாளர் பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், எஸ். ஐ. தேவதாஸ், ஆகியோர் பாராட்டினார்.


 


செய்தியாளர். மு. அமிர்தலிங்கம். மற்றும் பாலா.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,