சர்வாதிகாரம்......

சர்வாதிகாரம்...... 


                                     ( கவிதை )


 


                                                              ----வீனு


 


 


எவரெஸ்டை வெட்டி 
எனக்குள் போட்டாலும்
என் காதல் நிரப்ப 
இன்னும் நிறைய 
இடைவெளி இருக்கிறது 
உயிர் மெல்ல துடிக்கிறது 


நித்தம் எனக்கு 
உடல்சூடு அனலாச்சு 
உன் பெயர் சொல்லும் போதே
உள் நாக்கு இனிப்பாச்சு 
உயிர் மீது அது வீழ்ந்து 
இன்னுமொரு உறுப்பாச்சு


நீ இல்லை என்றால் 
இந்த பூலோகம் வெறுமை தான்
என்பேன் எனக்கு மட்டும் 
இந்த பூக்கூடை தனிமை தான் 
அன்பே நான் 
உனக்கு மட்டும் 


பாதிப்போர்வைக்குள் இரவு 
மீதிப்பார்வைக்குள் துறவு 
இடைப்பட்ட 
இடைவெளியில் 
இன்னிசை பொழிகிறது 
அதிகாலை 


நீ எனக்குள் 
சாகாவரம் பெற்ற 
சாகசக்காரன் 
சாகும் வரை எரியும் 
சர்வாதிகார
சந்தனக்கட்டை 


அடுப்படி கரண்டியாய் 
இருந்த என்னை 
அந்தரங்க உறுப்பாய் 
மாற்றி விட்டாய் 
இடுப்படி தொடாமல் 
இருப்பிடத்தை மூட்டி விட்டாய் 


உள்ளே புகுந்து
உட்திசு கிழித்து 
உள்ளம் குடைந்து
எனக்குள் நீ மர்மம் தான் 
அனுதினம் தின்னும் 
ஒரு வகை கர்வம் தான்


மெல்ல வா 
இரு மெட்டி போடு 
வெள்ளம் பார்த்த தேனியாய் 
கரு விழியில் முட்டி வீழு 
கட்டி வைத்த இந்த படகை 
கட்டிலுக்கு மெத்தையாக்கு! 


----வீனு 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி