பயந்து போன சேதுபதி
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேண்டுகோளை, தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஜய் சேதுபதி. நன்றி.. வணக்கம் என்றும் சொல்லியுள்ளார். இத்தனை பெரியவர்கள் கூறியபோதும் கொஞ்சமும் சலனம் காட்டாத அதே விஜய் சேதுபதிதான் இது. '800' என்ற பெயரில் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஈழப் போரின்போது இலங்கை அரசுக்கு முரளிதரன் ஆதரவாக இருந்ததாகவும், தமிழ் தாய்மார்களின் பதைபதைப்பை, கிண்டலும், கேலியும் செய்து கொச்சைப்படுத்தியதாகவும் முரளிதரன் மீது குற்றச்சாட்டு உண்டு. இதை அடுத்துதான் தமிழ் தேசியவாதிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று வற்புறுத்தினார்
. 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை எச்சரிக்கைகள் தமிழகம் மட்டும் கிடையாது. கர்நாடகாவில் இருந்து கூட விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடக தமிழ் மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் முரளிதரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மீறி விஜய் சேதுபதி அந்த படத்தில் நடித்தால் கர்நாடகாவில் விஜய்சேதுபதி படங்களைத் திரையிட விடமாட்டோம் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. முரளிதரனை நம்ப தயார் இல்லை இதனிடையே முத்தையா முரளிதரன் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தனது குடும்பம் போரால் பாதிக்கப்பட்டதாகவும், எனவே போர் நின்று போனதால், தான் மகிழ்ச்சி அடைவதாக கூறியதாகவும், அதை சிலர் திரித்துக் கூறி விட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அவரது முந்தைய செயல்பாடுகளை கண்கூடாக பார்த்த தமிழக அரசியல் தலைவர்களும், தமிழ் தேசியவாதிகளும் இந்த அறிக்கையை ஏற்கவில்லை.
தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், 800 படத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று முத்தையா முரளிதரன் இன்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உறுதியில்லை இத்தனை எதிர்ப்புகள், சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு இடையே சும்மா இருந்த விஜய் சேதுபதி, முரளிதரனின் இந்த அறிக்கையை டுவிட்டரில், ரீட்வீட் செய்துள்ளார். நன்றி.. வணக்கம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த திரைப்படத்தில் இருந்து, தான் வெளியேறப் போவதை, மறைமுகமாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இதிலும் உறுதி கிடையாது. உணர்வுகளை மதிக்கவில்லை
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறுவதாக வெளியாகும் செய்திகள் ஆறுதல் தான். இருப்பினும் முரளிதரன் கோரிக்கையை ஏற்று விலக முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகிறதே தவிர, மக்களின் உணர்வுகளை விஜய்சேதுபதி மதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி மீது கோபம் இது திருமாவளவன் குமுறல் மட்டும் கிடையாது. தமிழகத்தில் உள்ள பலரும் இதே மனக்குமுறலை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மட்டும் கிடையாது, திரையுலகத்தில் விஜய் சேதுபதியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் இமயமும், மூத்த கலைஞருமான இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தின் ஜாம்பவான்கள் கோரிக்கை விடுத்தும் அதுபற்றி பதில் சொல்லாமல், சலனம் காட்டாத, விஜய் சேதுபதி, முரளிதரன் ஒரு அறிக்கை விட்டதும் வழிமொழிந்து ட்விட் செய்துள்ளார்.
இது கொஞ்சமும் சரி கிடையாது என்று விஜய் சேதுபதியை விளாசி வருவதை பார்க்க முடிகிறது.
Comments