சகலகலாவல்லி சரஸ்வதி தேவி











சகலகலாவல்லி சரஸ்வதி தேவி🌹

 


ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் வாராதிங்கு இடர்.”

- கவிச்சக்கரவர்த்தி கம்பர்

அறியும் திறனுக்கு அரணாய் இருந்து, அருள்பாலித்து, ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து, காக்கும் சக்தியாய் உலவும் அன்னை சரஸ்வதி தேவி மென்மையின் இருப்பிடம்.

மென்மை உள்ள இடத்தில்தான் அறிதல் இருக்கும். வன்மை உள்ள இடத்தில் மட்டுமே நிலைக்கும். ஆணவம்கொண்டோருக்கு அன்னையின் அருள் கிட்டுவதில்லை.

அன்னை சரஸ்வதி கல்விக்கும் ஆயகலைகள் 64 க்கும் அதிபதி. சமயோசிதம், புத்திக்கூர்மை, நாவன்மை ஆகியவைகளுக்கும் அதிபதி கலைவாணியே.

பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிக்கும் சகலகலா வல்லியினது திருவடிகளை வெள்ளை நிறத் தாமரையே தாங்கியுள்ளது!

வஞ்சனையற்ற குளிர்ந்த எளியோர்களின் வெண்தாமரை போன்ற மனதினை திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ள ஏங்கி துதிக்கிறோம்.!

மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்வது போன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் அன்னம் சகலகலாவல்லி -

அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்வதைப்போன்று பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு வழங்கி அருள்பாலிக்கும் வெண்மையான பெண் அன்னம் -கலைமகள்

-கலைமகள் படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் கலைமகளைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவள் சகலகலாவல்லியே!

 


















 













 


 





















 











Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,