அகலிகை வார்த்தைகளுக்கு பாதத் தேடல்

சிக்கித்தவிக்கும்

முதல் வார்த்தையை

சிக்கவிழ்ப்பதில் தான்

கவிதையின்

ஆதி வேதனை

கொட்டிய வார்த்தைகளின்

எச்சமாய்

ஒரு முற்றுப்புள்ளி

முடிந்ததா?

சொல்லியது போதுமா?

சொல்லாமல் போனது நியாயமா?

வார்த்தைகள் அல்ல

அறிவின் போதாமை

அடுத்த கவிதையில்

எல்லாம் எழுதிவிட

ஒரு தோணல்

எழுதாத வரிகளில்

சாகும் எழுத்துகள்

அகலிகை வார்த்தைகளுக்கு

பாதத் தேடல்

கல் என்று கவியாகும்?

 

#மனதின்ஓசைகள்

#கவிஞர் # மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி