வாழப்பாடி திரு ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம்

 


முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதன் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான  அமரர் வாழபபாடி திரு ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினமான இன்று 27.10.2020


சென்னை ரா4ஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜிவ் பவனில் அவரது திரு உருவச்சிலைக்கு திரு ஜி-கே வாசன் அவர்கள்  மாலை அணிவித்து  மரியாதை செய்தார்


வாழப்பாடி கே. ராமமூர்த்தி (1940 - அக்டோபர் 272002)  தமிழக அரசியலில் ஒரு முககிய பங்கு வகித்தத இவர் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


ராமமூர்த்தி 1940 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார். 1959இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டே அக்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஜி. கே. மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980198419891991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும்1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். 1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999 பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார் ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,