ஐபிஎல்லில் 26.8 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த அணி
ஐபிஎல்லில் 26.8 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த அணி
ஐபிஎல் தொடரில் ரசிகர்களை கவர்ந்த அணி குறித்த ஆய்வை ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல்லின் மொத்த ரசிகர்களில் 75 சதவிகிதத்தினரை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பெற்றுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 25 சதவிகித ரசிகர்கள் வட்டத்தையே மற்ற 5 அணிகள் பெற்றுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 13 ஐபிஎல் சீசன்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த அணி எது என்பது ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 23 மாநிலங்களில் 3,200 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஐபிஎல்லின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 26.8 மில்லியன் ரசிகர்களை பெற்று சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் குறைந்த வித்தியாசத்தில் அதாவது 24.8 மில்லியன் ரசிகர்களுடன் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மூன்றாவது இடத்தில் 13.3 மில்லியன் ரசிகர்களுடன் ஆர்சிபி உள்ளது.
Comments